முதல்நாள் முடிவு எடுத்தது போல காலை 9 மணிக்கு கல்லூரி விடுதியில் ஒன்றுகூடுவோம் என கூறியது போல, யாரும் 9 மணிக்கெல்லாம் வரவில்லை , வந்திருந்தாலும் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏன் என்றால் நான் சென்ற நேரம் 10 மணி இருக்கும்.அங்கே அன்பான நிர்பந்தத்தால் நண்பர் இரவி மற்றும் நண்பர்களின் அறையில் முக்கால்வாசி இடத்தை அடைத்திருந்த புத்தகங்களுக்கு அருகில் படங்களோடும் வாசகங்களோடும் சூன் 26 (ஆனி 11 ) நிகழ்விற்கான பனியன்கள் தயாராய் இருந்தன.முதல்வேலையாக அந்த பணியங்களின் அளவை சரி பார்த்து அவற்றில் ஒன்றை அணிந்துகொண்டேன்.அன்றும் ,சில நாட்கள் முன்பும் எங்களுக்கு உதவிகள் புரிந்த இரவி மற்றும் அவரது விடுதி நண்பர்களுக்கு உரித்தான நன்றி தெரிவித்தாக வேண்டும் .

பலபணிகள் செய்ய ஏதுவாக எங்களுக்கு காத்து இருந்தன விடுதியின் சுவற்றிக்குள்ளே இருந்த புல்தரைகள்.சிறிதளவிலே கூடியிருந்த உணர்வாளர்களில் பலர் எனக்கு புதுமுகங்கள், என்னோடு வந்திருந்த என் தம்பியாக கருதும் தீபன் என்பரை மிக்கவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தேன், என்னையும் புதியவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேன், பெரிதாய் ஒன்றும் கூறவில்லை என்னைப்பற்றி கூறுவதற்கு இல்லை, என் பெயரை தவிர.
இதுநாள்வரை தீபனிடம் அன்பு காட்டிய எனக்கு, அன்று அவனை நண்பர்களிடம் அறிமுகம் செய்துவைத்த போதுதான் சில நொடிகள் யோசிக்கச் செய்தது , அவனது பெயரும் ஈழ விடுதலை வரலாற்றில் பதிந்த முக்கியப் பெயர் "தீபன்" என்று. பலவெற்றி நிகழ்வுகளை நடத்திப் பழகியவர்கள் போல ஆலோசனைகள் கூறிய அனைவருக்கும் அந்த நிகழ்வு தான் முதல் அனுபவம்.காலையுணவை மறக்காமல் எடுத்துக்கொள்ளும் நான் சிலநாட்கள் மட்டுமே அதை செய்ய தவறுவதுண்டு அன்று தவறிவிட்டேன்.
எல்லோரும் அங்கும் இங்குமாய் சிறுகூட்டங்களாக பேசியவாறு இருந்தனர்.சிலர் கைபேசியிற்கு வரும் அழைப்புகளிற்கு பதிலளித்தும் , பலருக்கு தொடர்பு கொண்டும் பேசியவாறு இருந்தனர்.அனைவரும் ஒன்றாய் அமர சில நிமிடங்கள் ஆனது, நானும் ஒரு சிறுகூட்டத்திற்குள் தான் பேசிக்கொண்டு இருந்தேன்.அங்கே வந்திருந்தவர்களில் சிலர் நீண்ட காலங்களாக இயக்கத்தோடு வேலைசெய்பவர்களுக்கு சில வேலைகள் கொடுக்கப்பட்டது,புதியவர்களின் திறன் அறிந்திராததால் மட்டுமே அப்படி செய்யநேர்ந்தது.இவை நடைபெறுகின்ற சமயங்களில் உணர்வாளர்கள் விடுதிக்குள் வந்தவாறே இருந்தனர்.
பலசுற்று கருத்துக்களுக்கு பின்பு செயற்திட்டம் முடிவானது, ஒரு நிலைக்கல்லிற்கு மரியாதை செலுத்தி அருகில் ஒரு வட்டில் தீபம் எரியச்செய்வது என்பது தான் அது .மேலும் தமிழ்த் தலைவர்கள், முக்கிய நபர்களின் இடம் எதனறுகே எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் முடிவானது.அது அந்த நிலைக்கல்லிற்கு சற்று தொலைவில் , ஒரு சிறிய சதுர வடிவில் இருக்கைகளோடு இருக்கவேண்டியதென முடிவு செய்யப்பட்டது.இந்த நிகழ்வு நமது சக்திக்கு மீறியது தான் இருந்தாலும் செய்துமுடிப்போம் என்பதே உரையாடிய உண்மைகளில் ஒன்று .மணி மதியம் 12 ஆன போது சிறு சிறு வேலைகளை செய்யத் தொடங்கினர்.பல குழுக்களாகவும் தனி நபராகவும் வேலைகள் நடக்க ஆரம்பித்தன.பல கட்சிகள்,இயக்கங்களில் இருந்தும் பலர் பணிகள்செய்ய பெரிதும் உதவினர்.

கலைத்துறை பாடங்கள் பயின்ற இரு மாணவர்கள் நிலைக்கல் போன்ற தோற்றம் கொண்ட கட்டயாலான ஒன்றை தயாரிக்கும் பணியில் இறங்கினர்.அவர்களுக்கு உதவும் பணி எனக்கு, தேவையான மரக்கட்டைகளும்,வண்ணங்களும் வாங்கினோம்.நேரம் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது, மதியப் பொழுது 2 மணி என்பதை கைக்கடிகாரத்தொடு சேர்ந்து சூரியனின் வெப்பமும் உணர்த்தியது.மரச்சானங்கள் இளைத்து வாங்கி வரும்போது நேரம் 3 மணியை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.பொருட்கள் விடுதியினுள் வந்தவுடன் வேலையில் இறங்கினார்கள் .கையில் இந்த நிகழ்விற்காக அச்சடிக்கப்பட்ட புத்தகங்ககை மக்களிடம் விநியோகிக்க கடற்கரயிர்க்கு பயணித்தோம் சில நண்பர்கள்.திரும்பி வந்த வேலை மதியஉணவு வந்தாகியது, உண்டால் தான் தொய்வின்றி உழைக்கலாம் என்பதால் மகிழ்ந்தே பகிர்ந்து உண்டோம்.கூட்டம் வரிசையாய் நிற்க அதற்க்கு எல்லை கோடாக இருக்க சிறுகுச்சிகள் கொண்டு அதில் வண்ணங்கள் கொண்ட தாள்கள் ஒட்டப்பட்டன.இந்த நிகழ்வுகளில் அடிக்கடி தேடப்பட்டவர் மாணிக்கம் என்பவர், பொருளாளர் என்பதால்.
இந்நிகழ்வின் முக்கிய அம்சம் அஞ்சலிக்காக மெழுகுதிரி ஏந்துவது, அதற்கு துணையான அம்சம் இந்த நிலைகல், ஆகவே அதை செய்வதில் கவனமாய் இருந்தோம்.மாலை 4 .30 மணியளவில் சாலையை கடந்து தோழர்களின் தோள்களோடு பயணிக்கத் தொடங்கியது நிலைகல்.தமிழர்களின் மானத்திற்கு அடையாளமான கற்புக்கரசி கண்ணகியின் சிலையிற்கு பின்பான மணல்பகுதியில் பணிகள் தொடங்கின.மீண்டும் புத்தகங்களை கையில் எடுத்துக் கொண்டு கடற்கரையில் பரவி இருந்த மக்களிடம் கொண்டு சேர்த்தோம் ,நானும் சில நண்பர்களும்.இந்நிகழ்விற்கான அன்றைய பணிகளில் கலந்துகொண்ட சிலர் பனியன்கள் மட்டுமே அணிந்து கொண்டு பணிகள் செய்யவில்லை.தங்களின் பணியை சிலரே முழுதாய் செய்தனர்.
வண்ணத்தாள்கள் ஒட்டப்பட்ட குச்சிகளை மக்கள் நிற்கும் எல்லைகளாக கடற்கரை மணலில் ஊன்றிய பின்பு புத்தகங்கள் என்னோடு நண்பர் செந்தில்,அசோக்,தேவா ஆகியோர் புத்தகங்கள் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.நேரம் மாலை 5 .30 மணியை தாண்டி இருக்கும், கையில் இருந்த எல்லா புத்தகங்களையும் கொடுத்து விட்டேன் மக்களிடம், செந்தில் அவர்களின் கையில் இருந்த புத்தகங்களில் பாதியை வாங்கி மீண்டும் விநியோகித்தேன் மக்களிடம். மீண்டும் நிலைகல் உள்ள இடத்திற்கு வந்த போது, அது மலர்களால் சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டு கொண்டு இருந்தது.

ஈழத்தின் சாயலாக நிற்கும் ஒற்றைபனைமரத்தின் அருகில் நின்று அங்கே வடிவமைக்கப்பட்டுக்கொண்டு இருந்த சமாதியின் தோற்றத்தை யாரும் மிதித்துவிடாமல் பார்த்துக்கொண்டேன்.மேலும் அங்கே வருகின்ற உணர்வாளர்கள் சிலரிடம் சில பதாதைகளை பிடித்துக் கொண்டு நிற்குமாறு வேண்டினேன்,அதையும் உணர்வோடு செய்தார்கள்.மக்கள் கூட்டம் நிரம்பிக்கொண்டு இருக்க, மெழுகுதிரிகளும்,தாள்கோப்பைகளும் அவர்களுக்கு தோழர்களால் கொடுக்கப்பட்டன.இருள்கவ்வும் நேரம் நெருங்கியது தலைவர்கள் இடம் கூட்டத்தினரால் சூழப்பட்டது, யார் இருக்கிறார்கள் என்பது எனது ஆர்வம் ஆனாலும் அவர்களை விட இந்த சமாதியின் தோற்றம் முக்கியமானது, யாரும் அதை தாண்டாமலும், சிதைக்காமலும் பார்த்துக்கொண்டு இருந்தேன்.இதற்கு நடுவே கட்சிக்கொடிகளை ஏந்தி நின்ற நண்பர்களிடம் அவற்றின் எந்தவேண்டாம் என கோரிக்கை இட்டுக்கொண்டே இருந்தோம் நானும் சிலநண்பர்களும்.அதில் சிலர் அதை ஏற்றுகொடிகளை இறக்கினர், சிலர் காரணங்கள் கூறிக்கொண்டு ஏந்தியவாறே இருந்தனர்.
ஒலிபெருக்கியில் ஐயா நெடுமாறனின் குரல் கேட்க ஆரம்பித்தது.ஒலிபெருக்கி பயன்படுத்துவதாக யாரும் என்னிடம் சொல்லவில்லையே என யோசித்தவாரே ஒரு ஆர்வத்தோடு அந்த தலைவர்களின் இடம் அருகே பின்புறமாக வந்தேன், எதிரே பத்திரிக்கையாளர்களின் கூட்டநெரிசல் தலைவர்களின் பகுதிநோக்கி சாய ஆரம்பித்தது, இந்த பத்திரிக்கயாளர்கள் நின்ற பகுதி மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையான பகுதியாகும்.ஐயா நெடுமாறனின் சிறிய உரைக்கு பின் , பண்ரூட்டி வேல்முருகன் அவர்கள் முழக்கமிட ஆரம்பித்தார்கள். மக்கள்வெள்ளத்தில் நிரம்பிவடிந்த கடற்கரை அன்று ஒரு "தீபக்கறை" யாகவே காட்சியளித்தது.கோசங்கள் முழங்க மக்கள் உணர்ச்சியோடு பங்குபெற்ற காட்சி கானக்கடிது.
சிறுவர்கள், குடும்பங்கள் பங்குபெற்றது பெரும்மகிழ்ச்சியே.நிகழ்வின் முடிவில் நிலைகல் அருகே குழந்தைகளோடு பலர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அருமைவெளிச்சம் மாணவர்களின் சோக பாடலும் ,சபதமும் உணர்ச்சிபூர்வமானது. வம்சவதம் என்ற நாடகம் காவல்துறையின் அழுத்தத்தால் பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது வருத்தமான ஒன்றாகும்.
ஒரு நாளே உயிர்வாழும் ஈசல் பூச்சி விளக்கில் தன்னை மாய்த்துக் கொள்வது போல,மக்களின் எழுச்சிக்காக ஒன்றுகூடலுக்காக திரண்ட உணர்வாளர்கள் , அந்த மெழுகு தீபங்களின் மேல் எண்களின் ஏக்கத்தை மரணிக்கச் செய்தோம்.