முத்துகுமாரின் சகோதரர்களான நாங்கள், அவரின் நோக்கம் நிறைவேறும் வரை போராடுவோம்

Tuesday, January 24, 2012

காலச்சுவடின் ‘முற்போக்கு’ வேடத்தைப் புரிந்துகொள்வோம்.. புறக்கணிப்போம்!!


வைதீகப் பார்ப்பானை விட லௌகீகப் பார்ப்பானே மிகவும் ஆபத்தானவன் என்பார் தந்தை­பெரியார். அதை மெய்ப்பித்துக் காட்டியதில் காலச்சுவடு முதலாளி கண்ணனுக்கும் ஒருமுக்கிய பங்குண்டு. ஒரு பக்கம் நடுநிலை, கருத்துவெளி என்று பம்மாத்து செய்துகொண்டு,மறுபுறம் தனது பார்ப்பனிய இந்துத்துவ அரசியலைப் பரப்புவதில் அவரது காலச்சுவடுக்கும்,சோ-வின் துக்ளக்க்கும் பெரிய வித்தியாசமில்லை.

ஒரு பத்திரிக்கை பெரியாரை எப்படி அணுகுகிறது என்பதிலிருந்தே அதன் இந்துத்துவசார்பை நாம் அறிய முடியும். தமிழ்நாடெங்கும் பெரியாரின் 125வது ஆண்டுவிழாவைஎழுச்சியோடு கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், பெரியாரைகொச்சைப்படுத்துவதற்காகவே காலச்சுவடு ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. தங்களது சாதிஆதிக்கம் தகர்ந்து கொண்டிருப்பதினால் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்கும்அக்கிரகாரத்து மாமாக்களின் ஆத்திரத்திற்கு வடிகாலாகவே அந்த சிறப்பிதழ் இருந்தது.பெரியார் தலித்துகளுக்கு ஒன்றும் செய்யவில்லை, பெண்விடுதலைக்கு ஒன்றும்செய்யவில்லை என்று தனது இலக்கிய அடியாட்களை விட்டு எழுதவைத்து, தனது பார்ப்பனவன்மத்தைத் தீர்த்துக் கொண்டது காலச்சுவடு.
பாபர் மசூதியை இடிப்போம் என்று கிளம்பிய இந்துத்துவவாதிகளால் முஸ்லிம்கள்அனுபவித்த சொல்லொணாத் துயரங்களை சிறுபத்திரிக்கைகள் மட்டுமே நடுநிலையுடன்பதிவு செய்த வேளையில், பாபர் மசூதி இடிப்பிற்கு இந்துத்துவ நியாயம் வழங்கியதுகாலச்சுவடு. அதன் பின்னரான காலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றுஇந்துத்துவ சக்திகள் பரப்பிய பொய்ப் பிரச்சாரத்தை காலச்சுவடு இதழில் வெளியிட்டு தனதுநடுநிலையைக் காத்துக் கொண்டார் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் மாணவரான கண்ணன்.

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டுலே வச்சாலும்..’ என்ற பழமொழி தாழ்த்தப்பட்ட மக்களைக்கொச்சைப்படுத்துவதற்காகவே ஆதிக்க சாதியினர் பயன்படுத்துவதாகும். இந்தப்பழமொழியை பிள்ளை கெடுத்தாள் விளை என்ற சிறுகதையாக சுந்தரராமசாமி எழுதிகாலச்சுவடில் வெளியானபோது, தமிழகத்தின் தலித் எழுத்தாளர்கள் கடுமையானஎதிர்வினையாற்றினார்கள். சுந்தரராமசாமியை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். அக்கதை மீதான விமர்சனங்களுக்குசுந்தரராமசாமியோ, காலச்சுவடு முதலாளி கண்ணனோ எந்தப் பதிலும் சொல்லாமல்,வழக்கம்போல் தமது இலக்கிய அடியாட்களை விட்டு, ‘சுந்தரராமசாமி நல்லவர்; வல்லவர்என்று எழுத வைத்தார்கள்.

கலை இலக்கியம் யாவும் மக்களுக்காக என்ற முழக்கத்துடன் எழுதிவரும் இடதுசாரிஎழுத்தாளர்களின் படைப்புகளை தொடர்ந்து மட்டம்தட்டியும், அத்தகைய எழுத்தாளர்களைதனிப்பட்ட முறையில் அவதூறு செய்தும் காலச்சுவடு எழுதிவருகிறது. மக்களுக்கானபடைப்புகள் இலக்கியமல்ல; அவை வெற்றுப் பிரச்சாரங்களே என்று கூறிவரும் காலச்சுவடு,அதற்கு மாற்றாக உள் மனவெளி, மனவுலக சஞ்சாரம் வகை எழுத்துக்களைமுன்னிலைப்படுத்தி தொடர்ந்து தமிழ் வாசகர்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. பார்ப்பனியகலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கும் படைப்புகளையும், தலித், சிறுபான்மையின மக்கள் மீதுஅவநம்பிகை ஏற்படும்படியான படைப்புகளையும் காலச்சுவடு தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
சுந்தரராமசாமிக்கு ஒரு சாகித்ய அகாடமியோ, ஞானபீட விருதோ கிடைக்கவில்லை என்றஆத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களைதனிப்பட்ட முறையில் தாக்கி எழுதி வருகிறது.

தேசிய இனப்போராட்டங்களுக்கு ஆதரவான குரல்கள் வலுத்துவரும் சூழலில் காலச்சுவடுதொடர்ந்து காஷ்மீர், ஈழப் போராட்டங்களுக்கு எதிரான கருத்துக்களை கட்டுரைகளாகவெளியிட்டு வருகிறது. தேசிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து,பார்ப்பன எழுத்தாளர்களும், இந்திய ஆளும்வர்க்கத்தின் கைக்கூலிகளும் எழுதும்கருத்துக்களை அரசியல் விவாதம் என்ற பெயரில் மறைந்து கொண்டு வெளியிடுகிறது.

காலச்சுவடின் பார்ப்பனிய முகம் ஒவ்வொரு முறை அம்பலமாகும்போது, அதைநேர்மையாக எதிர்கொள்ளாமல், தனது முகாமில் அடியாட்களாக இருக்கும்எழுத்தாளர்களை பதில் எழுதவிட்டு தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என தப்பித்துக்கொள்ளும் வேலையை சுந்தரராமசாமி காலத்திலிருந்தே கண்ணன் செய்துவருகிறார்.இன்று ஈழம் என்பது தமிழ் மக்களின் அனைவரது பேசுபொருளாகிவிட்ட சூழ்நிலையில்அதைவைத்து வியாபாரம் செய்யும் வேலையில் காலச்சுவடு நிறுவனம் இறங்கியுள்ளது.ஒரு பக்கம் இந்திய இலங்கை அரசு கைக்கூலிகளின் கருத்துக்களை வெளியிடுவது;மறுபக்கம் ஈழ எழுத்தாளர்களின் படைப்புகளை (ஈழப் போராட்ட நியாயங்களை அல்ல;வெறும் இலக்கியம் மட்டுமே) வெளியிடுவது என கயமைத்தனத்துடன் செயல்படுகிறது.

தலித், முஸ்லிம்கள், ஈழமக்கள் மத்தியில் அசிங்கப்பட்டு நிற்கும் தனது தோற்றத்திற்குஒப்பனை செய்யும் விதமாகவே அருந்ததிராய், தலித், முஸ்லிம் படைப்பாளிகளின்படைப்புகளை காலச்சுவடு ஆரவாரமாகவே வெளியிடுகிறது. இதனுள் இருக்கும் அரசியல்நேர்மையற்ற தன்மையை தமிழ்மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவேகாலச்சுவடு கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம் செய்தது.

டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து, காலச்சுவடு போன்ற தமிழின விரோத ஊடகபயங்கரவாதிகளை நாம் இனம் கண்டுகொள்ள வேண்டும்; புறக்கணிக்க வேண்டும்.