முத்துகுமாரின் சகோதரர்களான நாங்கள், அவரின் நோக்கம் நிறைவேறும் வரை போராடுவோம்

Saturday, July 30, 2011

Racist CPM and Dictator police

















இன்று சிபிஎம் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு என்று மாநில சுயாட்ச்சி - சம உரிமை என்ற பெயரில் சிறப்பு மாநாடு நடத்தியது. இதை எதிர்த்து நமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று சுவரொட்டிகளை சென்னை, திருநெல்வேலி, கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் மே 17 சார்பாக ஒட்டினோம். இதில் சென்னையில் மே17 இயக்கம் சார்பில் ஒட்டும்பொழுது வந்த திருவெற்றியூர் H8 காவல்நிலையத்தை சேர்ந்தவர்கள் சுவரொட்டி ஒட்ட கூடாது என்றனர். 

ஒரு மக்களாட்சி நடக்கும் நாட்டில் ஒருவர் தனது கருத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க மிகச்சிறந்த வழிமுறை இது அடிப்படை உரிமையும் கூட இதை சட்டத்திற்கு புறம்பாக ஒட்ட கூடாது என்று தடுத்தனர். அதன் பிறகும் விடாமல் சுவரொட்டிகளை ஒட்டினோம் ஆனால் அவைகளை காலையில் காவல்துறையினரே கிழித்திருக்கிறார்கள். இது அதுவும் காவல்துறையின் சட்டத்தையும் மக்களையும் பாதுகாப்பதை விட்டுவிட்டு போஸ்டர் கிழிக்கும் கேடுகெட்ட வேலையை செய்துள்ளனர்.. 

சுவரொட்டிகளே ஒட்டகூடாது என்றால் அருகில் இருக்கும் ஆதிமுக சுவரொட்டிகள், திரைப்பட சுவரொட்டிகளையும் சேர்த்து கிழிக்க வேண்டியது தானே அதை விடுத்து மே 17 சுவரொட்டிகளை மட்டும் கிழித்துள்ளனர் காவல்துறையினர்.. இங்கே இருக்கும் படங்களே இதற்கான ஆதாரங்கள். இப்படி நமது கருத்தையும் கண்டனத்தையும் வெளியில் தெரிவிக்க கூட நமக்கு உரிமையில்லாத நிலையிலேயே நாம் உள்ளோம்.

Wednesday, July 20, 2011

நிலா அம்மா - சூன் 26




சூன் 26 மெழுகுதிரி ஏந்தும் நினைவேந்தல் நிகழ்வை முடிவு செய்து அனைவரும் அவர்களுக்கு தெரிந்த இயக்கங்களை தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவையும் பங்களிப்பையும் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. அனைத்து தோழர்களும் அவர்களுக்கு தெரிந்த அமைப்புகளையும் தனிபட்ட மக்களையும் தொடர்பு கொண்டு நிகழ்வை பற்றியும் அதன் தேவையையும் உணர்த்தினோம். அப்படி தோழர் ராசராசன் அவருக்கு தெரிந்த ஊழலுக்கு எதிரான ஒர் அமைப்பான ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பில் இருந்த நிலா அம்மாவை தொடர்பு கொண்டார். அவர் ஆதரவை மட்டுமல்ல அவரும் எங்களுடன் சேர்ந்து களப்பணியில் பங்கு கொண்டார்.

இங்கு 20 இளைஞர்கள் சேர்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஒவ்வொரு முறையும் ஒருவர் கொடுக்கும் யோசனையை செயல்படுத்திக் கொண்டிருந்தோம். அப்படி பின்பற்றிய வழிகளில் எந்தளவு நம்முடைய நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப்போகிறது என்பது தெரியாமலேயே. அந்த சமயத்தில் தான் நிலா அம்மா எங்களுடன் கைகோர்த்தார் அவர் எங்களின் தாயரின் வயதினர் என்றாலும் ஒரு சக தோழி போல் ஓடி ஓடி உழைத்தார். சைதாப்பேட்டையில் தனி ஆளாக ஒவ்வொரு கடையிலும், ஆட்டோ ஸ்டாண்ட்களிலும் துண்டறிக்கை கொடுத்து பிரசாரம் செய்தார்.

ஒரு நாள் திநகர் பேருந்து நிறுத்தத்தில் களப்பணி செய்வது என்று முடிவு செய்து ஒரு 6 பேர் ஒன்று கூடினோம். நிலா அம்மாவும் வந்தார்கள் எங்களுடன் இணைந்து களப்பணி செய்ய. அனைவரும் ஒரு தேநீர் கடையில் கூடியபொழுது வந்து இறங்கிய நிலா அம்மா நேராக கடை முதலாளியிடம் சென்று துண்டறிக்கையை கொடுத்து அவரை நிகழ்வுக்கு அழைத்துவிட்டு வந்து தான் வாங்கி வைத்திருந்த தண்ணீரை குடித்தார்.

அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு அரை மணிநேரம் பேருந்து நிறுத்ததிற்கு உள்ளே பணியாற்ற சென்ற பொழுது அனைவரும் துண்டறிக்கை கொடுத்து கொண்டிருந்தோம். அங்கிருந்த போக்குவரத்து துறை பணியாளர்கள் நாங்கள் அவ்வாறு உள்ளே துண்டறிக்கை கொடுக்க கூடாது என்று சொன்ன பொழுது அனைவரையும் ஒருங்கிணைத்து வெளியில் செல்லலாம் என்று இவரை தேடியபொழுது இவரை கண்டுபிடிக்கவே ஒரு 10 நிமிடத்திற்கு மேல் ஆனது. நாங்கள் கொடுத்து கொண்டிருந்த இடத்தில் இருந்து பேருந்து வெளியில் செல்லும் வாயில் அருகே நின்று துண்டறிக்கை கொடுத்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு பனகல் பூங்கா அருகே சென்று துண்டறிக்கை விநியோகத்தை தொடர்ந்தோம் இது அனைத்தும் மதியம் 1 மணியில் இருந்து கொளுத்தும் வெயிலில் எந்தவித அயர்ச்சியும் இல்லாமல் எங்களின் சகதோழியாகவே முழு வேகத்துடன் பணி புரிந்தார்.

நிகழ்வுக்கான நாளும் வந்தது மெரினாவில் அனைவரும் ஒன்று கூடினோம். அப்பொழுது நாங்கள் ஏற்கெனவே தயராக வைத்திருந்த ஆடையை அணிந்து கொண்டு அவரும் ஒரு தன்னார்வதொண்டராக கூட்டத்தை ஒழுங்கபடுத்த எங்களுடன் கைகோர்த்தார். ஆயிரக்கணக்கான மக்கள் வந்த பொழுதும் கடைசிவரை அசராமல் எங்களுடன் இணைந்து பணியாற்றினார். முழக்கங்கள் இட்டபொழுது தனது முழு உணர்வுடனும் வேகத்துடனும் முழக்கமிட்டார்.

இந்த நிகழ்வில் எங்கள் அனைவருக்கும் பலவிதமான அனுபவங்கள் கிடைத்தது. ஆயிரக்கணக்கான மக்களை ஒரு இடத்தில் திரட்டுவதற்கு பிரபலங்களால் தான் முடியும் என்ற மாயை எங்களை விட்டு ஓடியது. அதையும் தாண்டி நிலா அம்மா போன்ற ஓர் தோழி இருந்தால் போதும் இவ்வுலகில் நாம் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.. ஒவ்வொரு இடத்திலும் இவரின் வேகம், உணர்வுப்பூர்வமான பேச்சுக்கள் என்று அனைத்தும் என்னையும் தோழர்களையும் மேலும் வேகமாக வேலை செய்ய தூண்டிய தூண்டுகோலாகவே அமைந்தது..

Thursday, July 14, 2011

மெரினா ஈசல்கள் - துரை


முதல்நாள் முடிவு எடுத்தது போல காலை 9 மணிக்கு கல்லூரி விடுதியில் ஒன்றுகூடுவோம் என கூறியது போல, யாரும் 9  மணிக்கெல்லாம் வரவில்லை , வந்திருந்தாலும் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏன் என்றால் நான் சென்ற நேரம் 10 மணி இருக்கும்.அங்கே அன்பான நிர்பந்தத்தால் நண்பர் இரவி மற்றும் நண்பர்களின் அறையில் முக்கால்வாசி இடத்தை அடைத்திருந்த புத்தகங்களுக்கு அருகில் படங்களோடும் வாசகங்களோடும்  சூன் 26  (ஆனி 11 ) நிகழ்விற்கான பனியன்கள் தயாராய் இருந்தன.முதல்வேலையாக அந்த பணியங்களின் அளவை சரி பார்த்து அவற்றில் ஒன்றை அணிந்துகொண்டேன்.அன்றும் ,சில நாட்கள் முன்பும் எங்களுக்கு உதவிகள் புரிந்த இரவி மற்றும் அவரது விடுதி நண்பர்களுக்கு உரித்தான நன்றி தெரிவித்தாக வேண்டும் .



பலபணிகள் செய்ய ஏதுவாக எங்களுக்கு காத்து இருந்தன விடுதியின் சுவற்றிக்குள்ளே இருந்த புல்தரைகள்.சிறிதளவிலே கூடியிருந்த உணர்வாளர்களில் பலர் எனக்கு புதுமுகங்கள், என்னோடு வந்திருந்த என் தம்பியாக கருதும் தீபன் என்பரை மிக்கவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தேன், என்னையும் புதியவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேன், பெரிதாய் ஒன்றும் கூறவில்லை என்னைப்பற்றி கூறுவதற்கு இல்லை, என் பெயரை தவிர.
இதுநாள்வரை தீபனிடம் அன்பு காட்டிய எனக்கு, அன்று அவனை நண்பர்களிடம் அறிமுகம் செய்துவைத்த போதுதான் சில நொடிகள் யோசிக்கச் செய்தது , அவனது பெயரும் ஈழ விடுதலை வரலாற்றில் பதிந்த முக்கியப் பெயர்  "தீபன்" என்று. பலவெற்றி நிகழ்வுகளை நடத்திப் பழகியவர்கள் போல ஆலோசனைகள் கூறிய அனைவருக்கும் அந்த நிகழ்வு தான் முதல் அனுபவம்.காலையுணவை மறக்காமல் எடுத்துக்கொள்ளும் நான் சிலநாட்கள் மட்டுமே அதை செய்ய தவறுவதுண்டு அன்று தவறிவிட்டேன்.

எல்லோரும் அங்கும் இங்குமாய் சிறுகூட்டங்களாக பேசியவாறு இருந்தனர்.சிலர் கைபேசியிற்கு வரும் அழைப்புகளிற்கு பதிலளித்தும் , பலருக்கு தொடர்பு கொண்டும் பேசியவாறு இருந்தனர்.அனைவரும் ஒன்றாய் அமர சில நிமிடங்கள் ஆனது, நானும் ஒரு சிறுகூட்டத்திற்குள்   தான் பேசிக்கொண்டு இருந்தேன்.அங்கே வந்திருந்தவர்களில் சிலர் நீண்ட காலங்களாக  இயக்கத்தோடு வேலைசெய்பவர்களுக்கு சில வேலைகள் கொடுக்கப்பட்டது,புதியவர்களின் திறன் அறிந்திராததால் மட்டுமே அப்படி செய்யநேர்ந்தது.இவை நடைபெறுகின்ற சமயங்களில் உணர்வாளர்கள் விடுதிக்குள் வந்தவாறே இருந்தனர்.

பலசுற்று கருத்துக்களுக்கு பின்பு செயற்திட்டம் முடிவானது, ஒரு நிலைக்கல்லிற்கு மரியாதை செலுத்தி அருகில் ஒரு வட்டில் தீபம் எரியச்செய்வது என்பது தான் அது .மேலும் தமிழ்த் தலைவர்கள், முக்கிய நபர்களின் இடம் எதனறுகே எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் முடிவானது.அது அந்த நிலைக்கல்லிற்கு சற்று தொலைவில் , ஒரு சிறிய சதுர வடிவில் இருக்கைகளோடு இருக்கவேண்டியதென முடிவு செய்யப்பட்டது.இந்த நிகழ்வு நமது சக்திக்கு மீறியது தான் இருந்தாலும் செய்துமுடிப்போம் என்பதே உரையாடிய உண்மைகளில் ஒன்று .மணி மதியம் 12 ஆன போது சிறு சிறு வேலைகளை செய்யத் தொடங்கினர்.பல குழுக்களாகவும் தனி நபராகவும் வேலைகள் நடக்க ஆரம்பித்தன.பல கட்சிகள்,இயக்கங்களில் இருந்தும் பலர் பணிகள்செய்ய பெரிதும் உதவினர்.



கலைத்துறை பாடங்கள் பயின்ற இரு மாணவர்கள் நிலைக்கல் போன்ற தோற்றம் கொண்ட கட்டயாலான ஒன்றை தயாரிக்கும் பணியில் இறங்கினர்.அவர்களுக்கு உதவும் பணி எனக்கு, தேவையான மரக்கட்டைகளும்,வண்ணங்களும் வாங்கினோம்.நேரம் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது, மதியப் பொழுது 2 மணி என்பதை கைக்கடிகாரத்தொடு சேர்ந்து சூரியனின் வெப்பமும் உணர்த்தியது.மரச்சானங்கள் இளைத்து வாங்கி வரும்போது நேரம் 3 மணியை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.பொருட்கள் விடுதியினுள் வந்தவுடன் வேலையில் இறங்கினார்கள் .கையில் இந்த நிகழ்விற்காக அச்சடிக்கப்பட்ட புத்தகங்ககை மக்களிடம் விநியோகிக்க கடற்கரயிர்க்கு பயணித்தோம் சில நண்பர்கள்.திரும்பி வந்த வேலை மதியஉணவு வந்தாகியது, உண்டால் தான் தொய்வின்றி உழைக்கலாம் என்பதால் மகிழ்ந்தே பகிர்ந்து உண்டோம்.கூட்டம் வரிசையாய் நிற்க அதற்க்கு எல்லை கோடாக இருக்க சிறுகுச்சிகள் கொண்டு அதில் வண்ணங்கள் கொண்ட தாள்கள் ஒட்டப்பட்டன.இந்த நிகழ்வுகளில் அடிக்கடி தேடப்பட்டவர் மாணிக்கம் என்பவர், பொருளாளர் என்பதால்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சம் அஞ்சலிக்காக மெழுகுதிரி ஏந்துவது, அதற்கு துணையான அம்சம் இந்த நிலைகல், ஆகவே அதை செய்வதில் கவனமாய் இருந்தோம்.மாலை 4 .30  மணியளவில் சாலையை கடந்து  தோழர்களின் தோள்களோடு பயணிக்கத் தொடங்கியது நிலைகல்.தமிழர்களின் மானத்திற்கு அடையாளமான கற்புக்கரசி கண்ணகியின் சிலையிற்கு பின்பான மணல்பகுதியில் பணிகள் தொடங்கின.மீண்டும் புத்தகங்களை கையில் எடுத்துக் கொண்டு கடற்கரையில் பரவி இருந்த மக்களிடம் கொண்டு சேர்த்தோம் ,நானும் சில நண்பர்களும்.இந்நிகழ்விற்கான அன்றைய  பணிகளில்  கலந்துகொண்ட சிலர் பனியன்கள் மட்டுமே அணிந்து கொண்டு பணிகள் செய்யவில்லை.தங்களின் பணியை சிலரே முழுதாய் செய்தனர்.

வண்ணத்தாள்கள் ஒட்டப்பட்ட குச்சிகளை மக்கள் நிற்கும் எல்லைகளாக கடற்கரை மணலில் ஊன்றிய பின்பு புத்தகங்கள் என்னோடு நண்பர் செந்தில்,அசோக்,தேவா ஆகியோர் புத்தகங்கள் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.நேரம் மாலை 5 .30 மணியை தாண்டி இருக்கும், கையில் இருந்த எல்லா புத்தகங்களையும் கொடுத்து விட்டேன் மக்களிடம், செந்தில் அவர்களின் கையில் இருந்த புத்தகங்களில் பாதியை வாங்கி மீண்டும் விநியோகித்தேன் மக்களிடம். மீண்டும் நிலைகல் உள்ள இடத்திற்கு வந்த போது, அது மலர்களால் சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டு கொண்டு இருந்தது.



ஈழத்தின் சாயலாக நிற்கும் ஒற்றைபனைமரத்தின் அருகில் நின்று அங்கே வடிவமைக்கப்பட்டுக்கொண்டு இருந்த சமாதியின் தோற்றத்தை யாரும் மிதித்துவிடாமல் பார்த்துக்கொண்டேன்.மேலும் அங்கே வருகின்ற உணர்வாளர்கள் சிலரிடம் சில பதாதைகளை பிடித்துக் கொண்டு நிற்குமாறு வேண்டினேன்,அதையும் உணர்வோடு செய்தார்கள்.மக்கள் கூட்டம் நிரம்பிக்கொண்டு இருக்க, மெழுகுதிரிகளும்,தாள்கோப்பைகளும் அவர்களுக்கு தோழர்களால் கொடுக்கப்பட்டன.இருள்கவ்வும் நேரம் நெருங்கியது தலைவர்கள் இடம் கூட்டத்தினரால் சூழப்பட்டது, யார் இருக்கிறார்கள் என்பது எனது ஆர்வம் ஆனாலும் அவர்களை விட இந்த சமாதியின் தோற்றம் முக்கியமானது, யாரும் அதை தாண்டாமலும், சிதைக்காமலும் பார்த்துக்கொண்டு இருந்தேன்.இதற்கு நடுவே கட்சிக்கொடிகளை ஏந்தி நின்ற நண்பர்களிடம் அவற்றின் எந்தவேண்டாம் என கோரிக்கை இட்டுக்கொண்டே இருந்தோம் நானும்  சிலநண்பர்களும்.அதில் சிலர் அதை ஏற்றுகொடிகளை இறக்கினர், சிலர் காரணங்கள் கூறிக்கொண்டு ஏந்தியவாறே இருந்தனர்.

ஒலிபெருக்கியில் ஐயா நெடுமாறனின்  குரல் கேட்க ஆரம்பித்தது.ஒலிபெருக்கி பயன்படுத்துவதாக யாரும் என்னிடம் சொல்லவில்லையே என யோசித்தவாரே ஒரு ஆர்வத்தோடு அந்த தலைவர்களின் இடம் அருகே பின்புறமாக வந்தேன், எதிரே பத்திரிக்கையாளர்களின் கூட்டநெரிசல் தலைவர்களின் பகுதிநோக்கி சாய ஆரம்பித்தது, இந்த பத்திரிக்கயாளர்கள் நின்ற பகுதி மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையான பகுதியாகும்.ஐயா நெடுமாறனின் சிறிய உரைக்கு பின் , பண்ரூட்டி வேல்முருகன் அவர்கள் முழக்கமிட ஆரம்பித்தார்கள். மக்கள்வெள்ளத்தில் நிரம்பிவடிந்த கடற்கரை அன்று ஒரு "தீபக்கறை" யாகவே காட்சியளித்தது.கோசங்கள் முழங்க மக்கள் உணர்ச்சியோடு பங்குபெற்ற காட்சி கானக்கடிது.



சிறுவர்கள், குடும்பங்கள் பங்குபெற்றது பெரும்மகிழ்ச்சியே.நிகழ்வின் முடிவில் நிலைகல் அருகே குழந்தைகளோடு பலர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அருமைவெளிச்சம் மாணவர்களின் சோக பாடலும் ,சபதமும் உணர்ச்சிபூர்வமானது. வம்சவதம் என்ற நாடகம் காவல்துறையின் அழுத்தத்தால் பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது வருத்தமான ஒன்றாகும்.

ஒரு நாளே உயிர்வாழும் ஈசல் பூச்சி விளக்கில் தன்னை மாய்த்துக் கொள்வது போல,மக்களின் எழுச்சிக்காக ஒன்றுகூடலுக்காக திரண்ட உணர்வாளர்கள் , அந்த மெழுகு தீபங்களின் மேல் எண்களின் ஏக்கத்தை மரணிக்கச் செய்தோம்.

Saturday, July 2, 2011

சூன் 26 - நினைவேந்தல்



மே 17 இயக்கத்தினரும் தோழமை இயக்கத்தினரும் இணைந்து நடத்திய சூன் 26 - நினைவேந்தல் நமக்கு உணர்த்துவது. மக்கள் நியமான காரணங்களுக்காக  வர தயராக இருக்கின்றனர் என்பது. 



இந்நிகழ்வின் மூலம் அனைவருக்கும் நாம் சொல்ல விரும்புவது ஒன்று தான் தனிதமிழீழமே ஓரே தீர்வு. ஓர் இனம் தனது உரிமையை கோரியபொழுது அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியவர்களை தண்டிப்பதால் மட்டும் தீர்வு கிடையாது. எதற்காக இத்தனை காலம் இத்தனை நாள் தங்கள் சொந்தங்களை பறிகொடுத்து உலகின் எங்கும் இல்லாத கொடுமைகளை எல்லாம் அனுபவித்தார்களோ அந்த ஈழ விடுதலையே அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தீர்வு.





தமிழகத்தில் சாதிக்காகவும் மதத்திற்காகவும் கட்சிக்காகவும் மட்டுமே கூடிகொண்டிருந்த மக்கள் முதன் முறையாக இவைகள் அனைத்தையும் கடந்து தம்மினத்திற்காக ஒன்று கூடினர். இதற்கு ஆதரவு அளித்த அனைத்தும் மக்களுக்கும், கட்சியினருக்கும், இயக்கங்களுக்கும் மற்றும் அனைத்து தோழர்களுக்கும் நன்றி.. 

பதிவர் - தோழர் ஹரிஹரன்